கோவையில் பிப்.,12ம் தேதி மாநில அளவிலான யோகா போட்டி : 3 வயது முதல் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

Author: Babu Lakshmanan
10 February 2023, 12:29 pm

கோவையில் வரும் 12ம் தேதி மாநில அளவிலான யோகா போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஸ்வஸ்திக் யோகா மையம் சார்பில் நடத்தப்படும் முதல் மாநில அளவிலான யோகா போட்டி, நீலாம்பூரில் உள்ள டெக்லத்தானில் நடைபெற இருக்கிறது. ஆஃப்லைன், ஆன்லைன் என இருமுறைப்படி நடக்கும் இந்த யோகா போட்டியில் 3 வயது முதல் 51 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஆஃப்லைன் எனப்படும் நேரடியாக பங்குபெறும் யோகா போட்டியில் பங்குபெறுபவர்கள் 12ம் தேதி டெக்லத்தானில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் ஏதேனும் 5 ஆசனங்களை செய்து காண்பிக்க வேண்டும். இவர்களுக்கு கட்டணமாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களின் விபரம் அன்றைய மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படும்.

அதேபோல, ஆன்லைனில் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் யோகா செய்யும் வீடியோவை 12ம் தேதிக்குள் போட்டிக்குழுவினருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெற்றியாளர்களின் விபரம் 19ம் தேதி வெளியிடப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!