ஈச்சனாரியில் கோர விபத்து…டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்: 2 பேர் பலியான சோகம்..!!

Author: Rajesh
16 February 2022, 9:58 am

கோவை: ஈச்சனாரி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி மேம்பாலத்தில் பொள்ளாச்சி நோக்கிச் சென்ற கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் லாரியின் அடியே கார் சிக்கியது.

இதில் காரில் வந்த இருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரை ஓட்டி வந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இடிபாடுகளுக்கு சிக்கினார். அவரை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஷியாம் என்ற அந்த இளைஞர் உயிரிழந்தார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ