கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் : கோவையில் 2 இளைஞர்கள் கைது….
Author: kavin kumar23 January 2022, 8:49 pm
கோவை : கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தண்ணீர்ப் பந்தல் வளைவில் வாகன சோதையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த எய்சர் வாகனத்தை சோதனை செய்ததில், அதில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மக்களிடம் அதிக பணம் கொடுத்து ரேசன் அரிசியை பெற்று கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து, 50 கிலோ எடையில் 210 பைக்களில் இருந்த 10 ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தியை வாகனத்தையும் பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர், கடத்தலில் ஈடுபட்ட தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் பீளமேடு பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்த் ஆகிய இருவரை கைது செய்தனர்.