தவறிய தந்தை… கைவிட்ட தாய்… 13 ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்த தாய் மாமன்… 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 12:03 pm

சென்னை : பெற்ற மகளையே கூட்டு பலாத்காரம் செய்ய உதவிய தாய் மற்றும் பலாத்காரம் செய்து வந்த தாய்மாமன் உள்பட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.

காசிமேடு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவர் இறந்து போனதால், வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த ஒரு வயது பெண்குழந்தையை, தனது தம்பியான தேசப்பன் என்பவருக்கு குழந்தை இல்லாததால், அவரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியுள்ளார்.

தாய் மாமனான தேசப்பன், அக்காவின் மகள் என்று கூட பாராமல், சிறுமிக்கு 9 வயது ஆனபோது பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து,
அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் இருந்து வெளியேறி, பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளார்.

சிறுமிக்கு 13 வயதான போது, தாய்மாமன் தேசப்பனும், அவரது மனைவி ரேவதியும் மீண்டும் அவரை காப்பகத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அச்சிறுமியை தேசப்பன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவருக்கு கருக்கலைப்பும் செய்துள்ளனர்.

அதன்பிறகு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கு சிறுமியின் தாய் மற்றும் தேசப்பனின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமியின் தாய் மகளை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளனர். தன்னை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள் என சிறுமி கேட்டபோது அவர் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி தாய் மற்றும் அத்தை இருவரும் துன்புறுத்தியுள்ளனர்.

இதன்பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்று காப்பகத்தில் தங்கியிருந்தார். ஆனால், அந்த காப்பகத்தின் பொருப்பாளரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, பெரவள்ளுர் காவல்நிலையம் மூலமாக சிறுமி அளித்த புகாரின் பேரில், குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, அவர் தனககு நேர்ந்த கொடுமைகளை நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு திடுக்கிட்டு போட நீதிபதி, அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சாந்தி மற்றும் தாய்மாமன் மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், பாலத்கார சித்ரவதைக்கு மத்தியில், மெட்ராஸ் கிறிஸ்டியன் சமூக சேவை ஆணையத்திடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார்.

நிர்வாகிகளான முன்னாள் செயலாளர் ஜோசப்பின் மற்றும் இஸபேல் ரிச்சர்ட்சன் ஆகியோர் உண்மையை மறைத்துள்ளனர். இவர்களில், கடந்த இஸபேல் ரிச்சர்ட்சன், தனது சகோதரர் செய்த பலாத்கார வழக்கு ஒன்றில் சிக்கி,கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர்கள் மீது போலீசார் போக்சோ வழக்கைப்பதிவு செய்துள்ளனர்.

மைனர் பெண்ணாக இருந்த போதில் இருந்து 13 ஆண்டுகள் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 21 வயது ஆனபோது, குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். தாய் மற்றும் அத்தை உள்பட 12 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1781

    0

    0