“சிக்கன் பிரியாணியால் வந்த தகராறில் பறிபோன உயிர்!”- சென்னையில் சோகம்!

Author:
19 June 2024, 12:49 pm

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாபு.இவர் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தியா.இவர்களுக்கு தாரிஸ் என்ற 16 வயது மகனும், கோகுல் என்ற மகனும் உள்ளனர். இதில் தாரிஸ் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அசைவ உணவு சுத்தமாக பிடிக்காது, சைவம் மட்டும்தான் உண்பார். இதனால் அவரது வீட்டில் சைவம் மட்டும்தான் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்கடந்த 17ஆம் தேதி கோகுல் அவரது நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டு உள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த தாரிஸ் தனது தம்பி கோகுலை திட்டி உள்ளார்.கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது அது தீவிரமான நிலையில் தாரிஸ் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.தாரிசின் தாயார் அறைக்குள் சென்ற தாரிஸ் கோபமாக இருப்பான் சிறிது நேரத்தில் வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக இருந்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் தாரிஸ் அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாயார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாரிஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே தாரிஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக தாரிசின் உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்த வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 258

    0

    0