ஐஸ்வர்யா ராய் மகளின் ஸ்கூல் பீஸ் எவ்வளவு தெரியுமா? கேட்ட உடனே தலை சுத்துதே!

Author: Shree
29 September 2023, 3:30 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் மகள் ஆராதியாவின் ஸ்கூல் பீஸ் குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ஆம், ஆராத்யா மும்பையில் உள்ள திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் தற்போதைய ஸ்கூல் பீஸ் ரூ. 4 லட்சத்து 70 ஆயிரம் என்று தகவல் வெளியாகி வியக்க வைத்துள்ளது. மேலும், அந்த பள்ளியில் எல்கேஜி to ஏழாம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் , எட்டாம் வகுப்பு to பத்தாம் வகுப்பு வரை நான்கு லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாவும், பிளஸ் ஒன் மற்றம் பிளஸ் டூ ஒன்பது லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் ஷாருக்கான், சைப் அலிகானின் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் குழந்தைகளும் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 726

    0

    1