ஜெயிலர் டிக்கெட்; வெறித்தனமான ரசிகை நான்!அபர்ணா பாலமுரளி

Author: Sudha
16 July 2024, 1:51 pm

நடிகை அபர்ணா பாலமுரளி தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலமாக திரையுலத்திற்கு அறிமுகமான இவர் வீட்ல விசேஷங்க திரைப்படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமான நடிகையானார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ராயன் திரைப்படத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் அபர்ணா முரளி.

அப்போது கேட்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்த ஒரு கேள்விக்கு தான் ரஜினிகாந்த் அவர்களின் தீவிரமான ரசிகை எனக் குறிப்பிட்ட அபர்ணா பாலமுரளி அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது அவரைப்போல மாஸ் வேறு யாரும் கிடையாது. ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தினமும் நான் டிக்கெட் இருக்கிறதா என ஆன்லைன் இல் தேடிக்கொண்டே இருப்பேன் அவ்வளவு தீவிர ரஜினி ரசிகை நான் என்று தெரிவித்தார்.இந்த வீடியோ இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…