ரோகிணி தியேட்டர் ஓனரின் மகன் திருமணத்தில் மாஸ் என்ட்ரி…. ரஜினியிடம் ஆசி பெற்ற பாஜக பிரமுகர்…!!
Author: Babu Lakshmanan21 February 2024, 8:55 pm
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என்றழைக்கப்படும் ரோகிணி தியேட்டர் ஓனரான பன்னீர் செல்வம் செட்டியாரின் மகன் ரேவந்த் சரண் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்து கொண்டார். அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த அவர், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், அவருடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த வினோஜ் பி செல்வம், எப்போதும் சூப்பர் ஸ்டார் தான். எங்களின் குடும்ப நிகழ்வில் ரஜினிகாந்த் சார் கலந்து கொண்டது ஆசிர்வதித்த தருணமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வம் நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவரையும் வினோஜ் பி செல்வம் உற்சாகமாக வரவேற்றார்.
லால் சலாம் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா தயாரித்து வரும் வேட்டையன் படத்தில் படுபிஸியாக உள்ளார். அந்த படத்தை விரைவில் முடித்து விட்டு தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார்.