நெருங்கும் தேர்தல்… எம்.ஜி.ஆர் போல் வேடம் அணிந்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Author: kavin kumar
14 February 2022, 7:16 pm

ஈரோடு : சத்தியமங்கலம் 27 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.கே.ஈஸ்வரன் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் வேடம் அணிந்தவருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.கே.ஈஸ்வரன் எம்ஜிஆர் போல் வேடம் அணிந்த நபருடன் வீடு வீடாக சென்று ஏற்கனவே பொதுமக்களால் தான் தேர்வு செய்த போது 27 வது வார்டில் செய்த பணிகளை சுட்டிக்காட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் இப்பகுதியில் உள்ள மக்கள் எந்த நேரமும் உதவிக்காக என்னை அழைக்கலாம் எனவும் பொதுமக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும் என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!