அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?

Author: Prasad
4 April 2025, 4:04 pm

மரண வெயிட்டிங் மாமே

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly

இத்திரைப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இதில் குறிப்பாக “God Bless U” என்ற பாடல் அதிரிபுதிரியான பாடலாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் இசையில் அமைந்த இப்பாடலை அனிருத் பாடியிருந்தார். இந்த பாடலை ரோகேஷ் எழுதியிருந்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ரோகேஷ், இப்பாடலை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அஜித்தான் இந்த வரியை சொன்னார்…

இப்பாடலில் “GBU மாமே God Bless U” என்று ஒரு வரி இடம்பெற்றிருந்தது. இந்த வரியை குறித்து பேசிய பாடலாசிரியர் ரோகேஷ், “முதலில் இப்பாடலில் GBU brother God Bless U” என்றுதான் இருந்தது. ஆனால் தல தான் GBU Brother வேண்டாம், GBU மாமே என்று எழுதும்படி கூறினாராம். எவ்வளவு Vibe-ல இருந்திருந்தா அவர் இப்படி சொல்லியிருப்பார்” என்று இந்த அரிய தகவலை பகிர்ந்துகொண்டார். 

ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly

“Good Bad Ugly” திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் டிரைலருக்காக மிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். 

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Leave a Reply