எனக்கு ஆண்மை இல்லையா..பத்திரிக்கையாளர் சொன்ன தகவலுக்கு பதிலடி கொடுத்த அஜித் ..!

Author: Selvan
12 November 2024, 4:35 pm

அஜித்தின் ஆரம்ப கால பயணம்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் அஜித்.

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தன்னுடைய ஆரம்ப நிலை சினிமா வாழ்க்கையில் தொடர் தோல்விகளை சந்தித்த அஜித் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என எண்ணினார்.

அதன் பின்பு மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தின் வெற்றி மூலம் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை வாரி குவித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

திருமண வாழ்க்கை

அஜித் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராகவும் சமூகத்தில் விளங்கினார்.அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ajith shalini love story

அஜித்துக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்களாக குழந்தை பிறக்காத நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் “திரைசுவை” என்ற பத்திரிகையில் நடிகர் அஜித்துக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை…அஜித்துக்கு ஆண்மை குறைபாடு இருக்கலாம் என அசிங்கப்படுத்தி இருப்பார்.

அஜித் செய்த உதவி

சில வருடங்களுக்கு பிறகு அந்த பத்திரிக்கையாளருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆபரேஷன் செலவு 2.5 லட்சம் கட்ட முடியாமால் தனியார் மருத்துவமனையில் தவித்து கொண்டிருக்கும் சமயத்தில் அஜித் அவருக்கு உதவி செய்து அந்த ஆபரேஷன் செலவிற்கான பணத்தையும் கட்டுவார்.

அப்போது சிலர் அஜித்திடம் எதுக்கு சார் ஹெல்ப் பண்ணீங்கனு கேட்கும் போது ஒருவர் கஷ்டப்படும் நிலையில் ஈகோ பார்த்து கொண்டு பழி வாங்க கூடாது என்று சொல்லி இருப்பார்.

இந்த நிகழ்வை பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறி இருப்பார்..அது வைரல் ஆகியும் வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 216

    0

    0