தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், தற்போது தனது தனிப்பட்ட ஆர்வமான கார் ரேசிங் மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு சமன்பாடு செய்து வருகிறார். குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேசிங்கில் தனது கனவை ஈடேற்றவும் முயற்சித்து வருகிறார்.
குட் பேட் அக்லி படத்தின் வெளிநாட்டு பகுதி படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், பல்கேரியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது புதிய ரேசிங் காரை உற்சாகமாக கண்டுகளித்தார்.தொடர்ந்து அதனை சுற்றி வந்து,சிறு குழந்தை போல் உள்ளே உட்கார்ந்து பார்த்தார்.அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவில் குட் பேட் அக்லி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
அஜித்தின் பிறந்த நாளில் விடாமுயற்சி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், புதிய கதையம்சத்துடன் அஜித்தின் திரைமுகத்திற்குப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்க: “எலோன் மஸ்க்”-யிடம் டீல் பேசிய சிவகார்த்திகேயன்…! X தளத்திற்கு ஆபத்தா..?
சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோக்கள், அஜித்தின் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கின்றன. அவரது உற்சாகத்தை கண்டு, ரசிகர்கள் கோலாகலமாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.