இதுக்கு மேல தாங்காது.. ஒரு வழியாக உறுதியானது அமீர் – பாவனி திருமணம்? இந்த தேதியில் தான் நடக்கிறது..!

Author: Vignesh
13 March 2024, 7:44 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

amir pavani - updatenews360.png 3

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

amir pavni - updatenews36y0

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

amir

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார். இவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

இப்படியான நேரத்தில் அமீர் – பவானி ஜோடி இணைந்து டாடா ஹரியர் மாடல் காரை வாங்கியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். சிலர் கல்யாணத்துக்கு முன்பே கணவன் மனைவிபோல் எல்லாத்தையும் பண்றீங்களே அப்பறோம் என்ன பண்ணுவீங்க? என விமர்சித்தும் இருந்தனர்.

amir

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கும் என அமீர் பாவணி ஜோடி கூறி உள்ளனர். இவருடைய திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பலரும் தங்களது வாழ்த்துக்களையும் இந்த காதல் ஜோடிக்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 361

    0

    0