CM குடும்பத்திற்கு சிறந்த கொத்தடிமை யார்? கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் : அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2025, 3:12 pm

தமிழ்நாடு பட்ஜெட் 2025 – 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களின் இன்று அமைச்சர் சேகர் பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

கருணாநிதி சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், இந்து அறநிலையத்துறையின் அடையாளமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுர படத்தை வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: இரண்டரை வயது குழந்தைனு கூட பார்ககல… அங்கன்வாடி ஊழியர் மீது பரபரப்பு புகார்!

பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. கடவுள் மறுப்பாளரான கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரமா என கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

Annamalai Codemned for Temple Gopuram in Kalaignar tomb

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

  • Just marry Simbu.. Fans Request to Trisha நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!
  • Leave a Reply