ஒதுங்கிய அசோக் செல்வன்.. சீறும் சூர்யா..!என்ன ஆகும்னு தெரியல?

Author: Selvan
14 November 2024, 1:18 pm

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பவர் அசோக் செல்வன். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சமீபத்தில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அசோக் செல்வனுக்கு வந்து
கொண்டிருக்கின்றன.

ashok selvan new movie release date

அமரனால் தள்ளிப்போன படங்கள்

இந்த நிலையில் அசோக் செல்வன் ரொம்ப நிதானமாக யோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். பாலாஜி கேசவன் இயக்கதில் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் எமக்கு தொழில் ரொமான்ஸ்.படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து
நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட குழு அறிவித்திருக்கிறது.

இதையும் படியுங்க: https://www.updatenews360.com/cinema-tv/vettaiyan-ott-release-unsuccessful-131124/

தில்லாக மோதும் சூர்யா

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படமும் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. அமரன் திரைப்படம் தொடர்ந்து 3 வாரமாக திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருவதால் ஒதுங்கி இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.இந்நிலையில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் திரையரங்கில் இன்று சீறி பாய்ந்தது.

kanguva update

எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் யார் எடுத்த முடிவு சரி என்று ஓரிரு நாளில் தெரியவந்துவிடும்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 165

    0

    0