வால்பாறை படகு இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பறவைகள்: நீரில் நச்சு கலந்துள்ளதா? என தீவிர விசாரணை..!!

Author: Rajesh
17 March 2022, 6:02 pm

கோவை: வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அம்மா படகு இல்லத்தில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நகராட்சிக்கு சொந்தமான ஸ்டாண்மோர் கரும்பாலம் பகுதியில் படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டு காலங்கள் கிடப்பில் உள்ளது. அங்கு தேக்கப்பட்ட நீர் கழிவு நீராக காணப்படுகிறது.

இங்கு வெள்ளை கரு நிற நாரைகள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் நடுவே உள்ள மரத்தின் கீழ் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளை நாரைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது.

இதனால் அவ்விடத்தில் பறவைகளின் வாழ்விடம் கேள்விக்குறியாக உள்ளது. அங்குள்ள தண்ணீரில் உள்ள விஷத் தன்மை கொண்ட மீன்களை உட்கொண்டிருக்கலாம் அல்லது மர்ம நபர்கள் நச்சுப்பொருள்களை அதற்கு கொடுத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!