எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது : சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி…
Author: kavin kumar13 February 2022, 1:49 pm
திருப்பூர் : இந்த தேசம் உலகத்தின் முதல் நாடாக உயரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற கட்சி பாஜக என்றும் எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது எனவும் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக பாஜக எழுச்சியோடும் இந்த நகராட்சியை கைப்பற்றிய தீரவேண்டும் என்ற உத்வேகத்தோடு மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆதரவு தருகிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை சந்தித்தோம் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். தெளிவாக சொன்னார்கள் அவருடைய தந்தை மொழிப்போர் தியாகி, ஆனால் நான் ஒரு ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகவும்,
நான் மிகுந்த நாட்டுப் பற்று உடையவள், மோடியின் உடைய கரங்கள் வலுப்படுத்த வேண்டும், தமிழகம் இன்றைக்கும் என்றைக்கும் நம்முடைய முத்துராமலிங்கத்தேவர் கூறியதுபோல் தேசியம் தெய்வீகத்தின் பக்கம்தான் நிற்கும். வரப்போகின்ற தேர்தல் தாமரைக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் கவர்னரை இழித்தும் பழித்தும் பேசுவது திமுகவின் வேடிக்கையாக உள்ளது. கவர்னர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அறிவார்கள் கவர்னர் உரை என்பது கவர்னர் தருகின்ற உரை அல்ல அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் கவர்னர் உடைய பணி சட்டமன்றத்திலே செய்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எதை எழுதி தந்திருக்கிறது மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் நீட் தேர்வு என்பது மறுக்கப்படுகின்ற பொழுது நீர் தேர்வு அதற்கு ஆதரவாக கவர்னர் கையெழுத்து இட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. ஒரு கவர்னர் அரசியல் சாசனத்தை மீறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக நடந்து கொண்டிருப்பது நடைமுறை சாத்தியம் இல்லை. இதை திராவிட முன்னேற்றக் கழகம் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை அவர்கள் மிகப் மிகப் பெரிய எச்சரிக்கையை திமுக அரசுக்கு தந்திருக்கிறார். அவர்கள் மட்டும் முரசொலியில் எழுதலாமா தொப்பென்று நினைத்தாயோ கொங்கணவா என்று எழுதுவார்கள்.
அதற்கு பதில் தரக்கூடாது என்று எதிர்பார்த்தால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. பாஜக தேசிய வெற்றி தோல்விகளை தாண்டி இந்த தேசம் உலகத்தின் முதல் நாடாக உயரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற கட்சி. காவி மறவர்களின் கட்சி எந்த சலசலப்பும் பாஜக அஞ்சாது. அவரவர்கள் ஜனநாயக ரீதியில் கொள்கைகளை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தமிழ் மக்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.