திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்ல… தேனியில் அண்ணாமலை வாக்குசேகரிப்பு..!!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 12:43 pm

திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்லை என்றும், இரண்டும் ஒன்று தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணமலை இன்று பிரச்சாரம் செய்தார்.

மேலும் படிக்க: எந்த வசதியுமே இல்ல… அமைச்சரின் சொந்தத் தொகுதியில் கருப்புக்கொடி ; திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் புகார்..!!

தேனி பங்களாமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கூறியதாவது :-தமிழ்நாட்டில் அரசியல் மாறிக் கொண்டிருக்கிறது. 2026 ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போடப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகள் பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். விளம்பரமே தேவையில்லாத ஆட்சி பாஜக ஆட்சி. திமுகவினர் விளம்பரம் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டை வளமாக்க பாஜகவுக்கு 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதில் டிடிவி தினகரனும் இருக்க வேண்டும். தேனியின் குரலாக யார் இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்தியாவை காக்க வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற தான் நாங்கள் முயற்சிக்கிறோம்.தேனியில் டிடிவி தினகரன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் தனது கட்சியில் இருந்து எந்த தொண்டரை நிறுத்தி இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவார். மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும், தமிழ்நாட்டில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான், டிடிவி தினகரனே நிற்கிறார்.

மேலும் படிக்க: அதிமுக நாலு…. தேமுதிக நாலு… ரிசல்ட் தேதி நாலு ; சென்டிமென்ட்டாக பேசி வாக்குசேகரித்த பிரேமலதா!!!

திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான். தொண்டர்கள் வேறு வேறாக இருக்கலாம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுதான். டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி அதிமுக தொண்டர்களும் டிடிவி தினகரனுக்கு தான் வாக்களிக்கப் போகின்றனர், எனக் கூறினார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 375

    0

    0