விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு : 32 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை…

Author: kavin kumar
21 February 2022, 4:37 pm

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தண்டுமேடு கிராமத்தில் வசித்து வருபவர் ராஜி(50) விவசாயி. இவர் கடந்த புதன்கிழமை வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 32 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள்,

15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் ராஜி புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1403

    0

    0