கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் கெடு விதித்து அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2025, 2:09 pm

தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில் உள்ள பலகை உள்ளிட்டவற்றில் சாதி பெயருடன் கல்வி நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டு வருகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப்பெயர்களை 4 வாரங்களுக்கு நீக்க வேண்டும், இல்லையென்றால் கல்வி நிலையம் அங்கீகாரத்தை ரத்து செய் யவேண்டும்.

இதையும் படியுங்க: திருட்டு பட்டம் சுமத்தியதால் கல்லுரி மாணவி விபரீத முடிவு : கோவை இந்துஸ்தான் கல்லூரி மீது பரபரப்பு புகார்!

அரசு கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதி திராவிடர் நலப்பள்ளிகளை அரசு பள்ளிகள் என பெயர் மாற்ற வேண்டும். பள்ளி பெயர்களின் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இருக்க வேண்டும், அவர்களின் சாதி பெயர் இடபெறக்கூடாது

Caste names should be removed from educational institutions.. High Court Order

சாதி பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக் கூடாது என்று பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்து ஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமாக அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

  • goundamani shout actors in shooting spot ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…
  • Leave a Reply