உள்ளயே வர முடியாது-னு சொன்னாங்க… உதயநிதி தொகுதிக்குள்ளயே பாஜக வந்தாச்சு ; வினோஜ் பி செல்வம்!!
Author: Babu Lakshmanan28 March 2024, 4:24 pm
பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், மத்திய சென்னைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நான்கு முனைப் போட்டியாக களம் அமைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. பலரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
அந்த வகையில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், ஆவணங்கள் முறையாக இல்லை எனக் கூறி பாஜக வேட்பார் வினோஜ் பி செல்வத்தின் வேட்புமனுவை நிராகரிக்க திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்தது.
இது தொடர்பாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில், “என்னுடன் களத்தில் மோதுங்கள். இதுபோன்ற வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் அறைகளில் வேண்டாம். நீங்கள் ஏசி அறையில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில் 77வது வார்டில் நான் பிரச்சாரத்தை முடித்து விட்டேன். ஆனால் உங்களை மக்கள் உள்ளே கூட விட மாட்டார்கள். களத்திற்கு வாருங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், மத்திய சென்னைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஆட்டோவில் பயணித்தபடி, வீதிவீதியாக தாமரை சின்னத்திற்கு ஆதரவை தருமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது, பேசிய அவர், பாஜகாவால் உள்ளேயே வர முடியாது-னு சொன்னாங்க. இப்ப பாஜகவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக மீது மக்களிடையே அதிருப்தி அலை உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் சொந்த தொகுதியில் பாஜகவுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த போதில் இருந்து தற்போதும் குடிசை வீடுகள் தான் இருக்கின்றன. கருணாநிதியின் குடும்பம் தான் நன்கு வளர்கிறது.
ஏழை, ஏழையாகவே சாக வேண்டும் என்று அவசியமில்லை. இப்ப இருக்கும் எம்பிக்களை போல காணவில்லை என்று இருக்க மாட்டேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பாடுபடுவேன். திமுக மட்டுமே எங்களின் எதிரி. காரணம் என்னவென்றால், மோடியின் பெரிய எதிரியே வாரிசு அரசியல் தான். அந்த வாரிசு அரசியல் இருக்கும் பகுதி இந்த மத்திய சென்னை தான். எனவே, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என தெரிவித்தார்.
காலையில் புலியந்தோப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்கிருந்த சாலையோர டிபன் கடையில், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உணவருந்தினார். அப்போது, சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
மேலும், போதைப்பொருள் பழக்கத்தில் குழந்தைகள் சிக்கி விடக் கூடாது என்று எச்சரித்த அவர், குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் முக்கியம் என்றும், சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களையும் விவரித்தார்.
0
0