வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்…
Author: kavin kumar10 February 2022, 11:27 pm
கோவை : கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
கோவைப்புதூர் பகுதியில் கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவு, லைசென்ஸ் கொடுப்பது உள்பட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து 16 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் குழு இன்று மாலை கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.