திடீரென குறுக்கே வந்த மாடு… ஒரே இரவில் நடந்த அடுத்தடுத்த சம்பவம்… 9 பேர் உயிரிழந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 12:03 pm

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற கார் விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் வாயலூர் பகுதியில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரிக்கு சென்று கொண்டிருந்த காரில் ஐந்து பேர் பயணித்திருந்தனர். அப்போது, திடீரென மாடு குறுக்கே வந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: ‘உயர்நீதிமன்ற உத்தரவை பாருங்க’.. செந்தில் பாலாஜி வழக்கில் குறுக்கே திரும்பிய அமலாக்கத்துறை…!

மேலும், இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (22), வடபழனி பகுதியை சேர்ந்த ஏழுமலை (40), சூளை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த விக்கி (28), மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (24) ஆகிய நான்கு பேரின் உடல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். உயிரிழந்த மற்றொரு நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டம் பகுதியில் , பண்ருட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி சேர்ந்த அப்துல் சமத், இவர் சவுதி செல்லும் நிலையில் அவரை வழி அனுப்ப, அவரது மனைவி ஜெய் பினிஷா ( 40), அவரது மகன்கள் மிச்சால் (20), பைசல் (12), மற்றும் மற்றொரு மகன் அத்தல் (16) ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்று விட்டு, காரில் பண்ருட்டி திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை ஓட்டுநர் சரவணன் (50) ஓட்டி வந்தார். அப்பொழுது முன்னே சென்ற கனரக லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் சரவணன், ஜெய் பினிஷா, மிச்சால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்தல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இசிஆர் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய பிரதான சாலைகளில் நடந்த இரண்டு விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இரு வேறு வழக்குகளை பதிவு செய்த காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 304

    0

    0