தெலுங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக ஹரிஹரசுதன் நியமனம் ; நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு..!!
Author: Babu Lakshmanan26 October 2023, 7:00 pm
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக ஹரிஹரசுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வரும் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவேந்த ரெட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெலுங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக்ரவு தாக்கரே ஒப்புதலுடன், என்னை தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
என்னை நியமனம் செய்ய பரிந்துரை செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கார்த்தி சிதம்பரம் எம்பி, செகந்திராபாத் பாராளுமன்ற பொறுப்பாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.