கோவை தடாகம் பகுதியில் தென்பட்ட சிறுத்தை… வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி… கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 October 2022, 11:55 am
Quick Share

கோவை : தடாகம் பகுதியில் உலவி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை தடாகம் சாலை காளையனூரில் நேற்று சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆடுகளை தாக்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை உள்ளதா..? என கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், காளையனூர் – திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது.

இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் மலை அடிவாரத்திலேயே சிறுத்தை அமர்ந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காளையனூர் மட்டுமல்லாமல் சோமையனூர், திருவள்ளுவர் நகர் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டு வைத்து சிறித்தையை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

https://player.vimeo.com/video/757855656?h=b0d298a55b&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 672

    0

    0