சாலையில் நடந்து சென்ற பெண்… காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையன்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி
Author: Babu Lakshmanan15 May 2023, 7:40 pm
கோவை; கோவையில் காரில் வந்த நபர் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணின் செயினை பறித்து, அவரை தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண் ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.
அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால், சிறிது தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிர் தப்பிய விடியோ காட்சி வெளியாகியுள்ளது.