டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்திருப்பதாக புகார் : CCCA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 10:12 pm

டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்திருப்பதாக புகார் : CCCA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

CCCA ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளரும் KCP Infra நிறுவனத்தின் தலைவருமான K.Chandraprakash வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களில் சிலர் டெண்டரில் பங்கேற்றும் தங்களது டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்து இருப்பதாக புகார் வந்துள்ளது.

எப்போது எந்த தேதியில் வெளியான டெண்டர்,ரோடு வடிகால் என எந்த வகையான பணி,டெண்டர் விண்ணப்பம் எப்போது சமர்ப்பிக்கப்பட்டது என்ற விவரங்களை சரியாக ஒப்பந்ததாரர் நல சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அனுப்பி வைக்கலாம்.

இந்த புகார்கள் அனைத்தும் சங்கத்தின் சார்பாக மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர்,நகராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு உடனடியாக அனுப்பி வைத்து தீர்வு காணப்படும்.

ஒப்பந்ததாரர் நல சங்கம் ஒப்பந்ததாரருக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறது.நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக இதற்காக புகார் தர வேண்டிய அவசியம் இல்லை . சங்கமே இதை முன் நின்று புகாராக பதிவு செய்து தீர்வு பெற்று தரும்.

எப்போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சங்கத்தை அணுகி உதவி பெறலாம்.தேவையான உதவிகளை செய்ய சங்கம் தயாராக இருக்கிறது என KCP Infra நிறுவனத தலைவர் K.Chandraprakash தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ