கொரோனா குறித்து விழிப்புணர்வு வாகனம் : துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…
Author: kavin kumar27 January 2022, 1:55 pm
விருதுநகர் : பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு வாகனத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவியது. இந்நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ்சிறப்பு காணொளி காட்சிகள் உடன் கூடிய வாகனத்தின் செயல்பாட்டை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே குறித்த விழிப்புணர்வு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவது முக்கியத்துவம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் நோக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.