கடலூர் அருகே பயங்கரம்… கார் மீது அரசுப் பேருந்து மோதி கோர விபத்து ; குழந்தை உள்பட 4 பேர் பலி
Author: Babu Lakshmanan13 February 2023, 8:38 am
கடலூர் : கடலூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் பனியின் காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் தரப்பிலும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.