கிராமத்து ஆளாக மிரட்டும் நானி – தசரா ட்ரைலர் ரிலீஸ்!

Author: Shree
14 March 2023, 8:44 pm

கிராமத்து ஆளாக மிரட்டும் நானி – தசரா ட்ரைலர் ரிலீஸ்!

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் தசரா. ரத்தம் தெறிக்க முற்றிலும் வித்தியாசமான கிராமிய தோற்றத்தில் நானி மிரட்டியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் சாய் குமார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் கீர்த்தி சுரேஷ் பள்ளி ஆசிரியையாகவும், நானி பிரச்சனைகளை தேடி செல்லும் தரணி வேடத்திலும் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு புஷ்பா புகழ் இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படம் இந்த மாத மார்ச் 30 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?