ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் : அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

Author: kavin kumar
11 February 2022, 4:19 pm

திருவள்ளூர் : வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் தேசிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் சுமார் 1,500 பேருக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல் மின் நிலைய வாயில் முன்பாக ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபபட்டார். அப்போது, அனல் மின் நிலைய நிர்வாகிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 911

    0

    0