அரியலூர் மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
25 January 2022, 6:04 pm

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட மாணவி லாவண்யா கிறிஸ்துவ மதத்தினரால் மதமாற்றத்தால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும், அந்த மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் லாவண்யா சம்பவம் போன்று யாருக்கும் இனிமேல் நடைபெறாமல் நீதியை நிலைநாட்டுவதற்கு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரே இந்து முன்னணி கட்சி சங் பரிவார சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாணவி லாவண்யா விற்கு நீதி வழங்க வேண்டும், உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பாரதி, கோட்ட செயலாளர் முருகையன், பிஜேபி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu