அதுக்கு வேற ஆள பாருங்க…. தனுஷுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை – கொந்தளிக்கும் கோலிவுட்!

Author: Shree
9 June 2023, 4:59 pm

பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பாய்காட் பாலிவுட்டில் இருந்து தனக்கு கொடுக்கும் டார்ச்சர்களையெல்லாம் தனியாளாக எதிர்த்து நின்று போராடி வருபவர் கங்கனா.அவர் மிகவும் தைரியமான நடிகையாக அங்கிருப்பவர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

ஆனால், சக நடிகர்களுக்கு கங்கானாவை சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம் ஸ்டார் கிட்ஸ்களுக்கு மட்டும் வாய்ப்புகள் வீடு தேடி செல்கிறது. ஆனால், என்னை போன்ற திரைத்துறை பின்பலம் இல்லாத திறமை வாய்ந்த நடிகர்கள் வாய்ப்பு கிடைத்தும் ஒடுக்கப்படுகிறார்கள் என வெளிப்படையாகவே பல பேட்டிகளில் கூறியுள்ளார். பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹரை நேரடியாகவே உன்னை போன்ற நபர்களால் தான் பாலிவுட் மோசமடைந்தது வருகிறது என கூறி சர்ச்சை கிளப்பினார்.

யாருக்கும் அஞ்சாத அவர் எத்தனை எதிர்ப்புகள் , மிரட்டல்கள் வந்தாலும் தனி பெண்ணாக தைரியமாக நின்று போராடுவார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக D50 படித்தால் நடக்க மறுத்துள்ளார். ஏற்கனவே சிம்புவுக்கு ஜோடியாக STR 48 படத்தில் தீபிகா படுகோன் நடிக்க மறுத்தார் இப்படி தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் கோலிவுட் ஹீரோக்களை நிராகரித்து வருவதால் திரைத்துறையில் பிரிவினை ஏற்படுகிறது என பிரபலங்கள் கூறுகிறார்கள். பாய்காட் பாலிவுட் குறித்து வாய் கிழிய பேசும் கங்கனா இப்போ என செய்துள்ளார்? என பலர் கேள்வி எழுப்பியுன்னர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?