ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..

Author: Selvan
21 November 2024, 9:20 pm

நடிகர் தனுஷ் தற்போது அவருடைய சினிமா வாழ்க்கையில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

அவரை பற்றி நிறைய விமர்சனங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும்,சினிமா வாழ்க்கையிலும் வந்து கொண்டு இருந்த போதும்,அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து படங்களில் பிசியாக உள்ளார்.

இவர் தற்போது டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலின் ஓய்வு அறிவிப்பிற்கு ஆதரவாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 38 வயதாகும் ரஃபேல் நடால் முதன்முதலாக டெவிஸ் கோப்பையில் விளையாடி தன் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் தற்போது அதே டென்னிஸ் டெவிஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: மனைவியுடன் தேனிலவு… பக்கத்து அறையில் ஏ.ஆர்.ரகுமான்…!கூட‌ யார்?

இவர் இளம் வயதில் பல சாதனைகளை புரிந்து டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்.இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் போட்டி விளையாடும் நிலையில் 14 முறை பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போது ரஃபேல் நாடால் ஓய்வு பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ரபேல் நடால் ஓய்வு பெற்றதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரம் பரபரப்பான பேசப்படும் நிலையில் ஜாம்பவான் ரபேல் நடால் ஓய்வு பெற்றதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் பதிவிட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது .

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 233

    0

    0