இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!

Author: Selvan
27 February 2025, 10:02 pm

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் கூட்டணியா

திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 2000 கோடி ரூபாய்க்கு அதிகமான போதைப்பொருளை கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: ‘ஆப்கானிஸ்தான்’ டீமை யாரும் அப்படி நினைக்காதீங்க..சச்சின் போட்ட உணர்ச்சிகரமான பதிவு..!

இவர் போதைப்பொருள் மட்டுமின்றி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை உட்பட பல பிரிவுகளில் ஓராண்டுக்கு மேலாக இவர் மேல் விசாரணை நடந்து வருகிறது.மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த குற்ற பத்திரிகையில் இயக்குனர் அமீர் பெயரும் இடம்பெற்றுள்ளதால் அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்வேதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் முக்கிய புள்ளியாக ஜாபர் சாதிக் செயல்பட்டுள்ளார்.

அதன் மூலம் ஈட்டிய பணத்தை இயக்குனர் அமீர் மற்றும் போலி நிறுவனங்களை நடத்தி அதில் உள்ள வங்கிக்கணக்கில் செலுத்தியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களை கேட்பதற்காக இந்த வழக்கை நீதிமன்றம் மார்ச் 11 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.இந்த வழக்கில் அமீர் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவரை கைது செய்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  • Director Ameer connection to drug case இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
  • Leave a Reply