கூழ் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்….

Author: kavin kumar
17 February 2022, 6:04 pm

தருமபுரி : தருமபுரி 26 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் திலகமணி கோவிந்தன் கூழ் வண்டியில் கூழ் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரித்தார்.

வருகிற 19 ந் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெருகிறது. இதனை தொடர்ந்து தருமபுரி நகராட்சி தேர்தலில் 33 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று வீடு வீடாக சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 26 வார்டில் போட்யிடும் திமுக வேட்பாளர் திலகமணி கோவிந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவரது வார்டுக்குட்பட்ட பகுதியில் கூழ் வியாபார கடையில் நின்று கூழ் வியாபாரம் செய்து அங்கு வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் திலகமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதே போல் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் பாபுசேட் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அன்புக்கு அடையாளமாக ரோஜா பூக்களை வேட்பாளர்களிடம் கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?