சமாதான புறா பறக்கவிட்ட ஆட்சியர் : 73 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்!
Author: kavin kumar26 January 2022, 2:31 pm
வேலூர் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்ததுடன் 28 துறைகளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்த பின்னர், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் சமூக நல்லிணக்க வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஆட்சியர்,
காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கங்களும், பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட 28 பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வெளியை பின்பற்றியும் பெற்று பங்கேற்றனர்.