கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த ஒரம்புபாளையம் காமராஜ் நகரில் வசிப்பவர் சடையப்பன். இவருக்கு ஜானகி என்கின்ற மனைவியும், தேவபிரகாஷ் என்கின்ற மகனும் உள்ளனர். நேற்று நள்ளிரவில் தந்தை, மகன் இருவரும் மது போதையில் இருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது, சடையப்பன் வீட்டிலிருந்த அரிவாளால் மகனை இடுப்புக்கு கீழ் பகுதியில் வெட்டியதால் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தேவபிரகாஷை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேவபிரகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் சடையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த தேவ பிரகாஷ் ஏற்கனவே அடிதடி தகராறில் சிறைக்கு சென்று தற்போது பிணையில் வந்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் கையெழுத்து இட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.