மீண்டும் ஆளுங்கட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை ரெய்டு?அனல்மின் நிலைய டெண்டரில் முறைகேடு? வெளியான அதிர்ச்சி தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 3:05 pm

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிபந்தனையின் அடிப்படையில் ஈரச்சாம்பல் அகற்றுவதற்கு ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டது.

இதில் திமுகவுக்கு நெருக்கமான RP Infratech நிறுவனம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் WETASH எடுக்க மின் டெண்டர் மற்றும் ஏலம் கோரப்பட்டிருந்தது.

இந்த டெண்டரை மற்ற நிறுவனங்களுக்கு கிடைக்காமல் RP Infratech நிறுவனத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் டெண்டர் விடப்படுவதாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டரையும் திமுகவுக்கு சாதகமான நிறுவனத்துக்கே டெண்டர் ஒப்பந்தம் அளித்ததாக சமீபத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் கொடுத்திருந்தார்.

ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய சோதனை மேல் சோதனையால் செந்தில்பாலாஜி சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இந்த டெண்டர் ஒப்பந்தம் காரணமாக தமிழகத்தில் இன்னொரு ரெய்டு நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மத்தியில் இந்த தகவல் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 198

    0

    0