Categories: Uncategorized @ta

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி…

மதுரை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றைக் கண்காணிக்க பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதன் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட அளவில் செல்போன்களைப் பறிகொடுத்த நபர்களுக்கு, அதனை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இதுவரை திருடப்பட்ட 600 செல்பேசிகள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற நிகழ்வில் மட்டும் 75 செல்பேசிகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுமட்டுமன்றி இணை வழி பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை இழந்த நபர்களுக்கு ரூ.25 லட்சம் மீட்கப்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மீட்டுள்ளனர். தற்போது செல்பேசிகளைப் பறிகொடுத்த நபர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மீட்கப்பட்டவுடன் அந்தந்த வாரத்திலேயே திரும்பக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதிகாரப்பூர்வமற்ற முறையில் வரும் ஓடிபி எண்களை உள்ளீடு செய்ய வேண்டாம். இணைய வழி பணப்பரிவர்த்தனைகளின்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற இணை வழி மோசடிகளில் பாதிக்கப்பட்டால் 1,55,260 என்ற எண்ணிலும், இணைய தளத்திலும் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். உடனடியாகத் தீர்வும் கிடைக்கும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை மேலூர் வெள்ளாளபட்டி, திருமங்கலம், பேரையூர், தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, பரவை, சோழவந்தான் ஆகியவற்றில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுத்துள்ளோம். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற பதட்டமான வாக்குச்சாவடிகள் 100 எண்ணிக்கையில் உள்ளன. இதற்குத் தேவையான பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதுகுறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளோம். அவ்வப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கும் உத்தரவுகளையும் மாவட்ட காவல்துறை கடைப்பிடிக்கும்.

மதுரை பகுதியில் கஞ்சா நடமாட்டத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறைக்கு கிடைக்கும் சிறிய தகவல்களையும்கூட உடனடியாக சரிபார்க்கப்படுகின்றன. இதுபோன்ற போதை பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

KavinKumar

Recent Posts

விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சூட சூட பதிலடி.!

ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…

4 minutes ago

கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த B4U!

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…

14 minutes ago

உள்ளூரிலேயே விலை போகாதவர் PK… திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…

42 minutes ago

என் தங்கச்சி எங்க போறாங்கனு தெரியும்.. நாதகவின் அடுத்த நகர்வு? சீமான் பதில்!

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…

1 hour ago

வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!

சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…

2 hours ago

25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!

குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…

2 hours ago

This website uses cookies.