பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் போக்சோவில் கைது!!

Author: Rajesh
10 April 2022, 5:34 pm

கோவில்பட்டி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமம் வசந்த நகரைச் சேர்ந்த தாமஸ் சாமுவேல் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், அங்கு 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல், 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமஸ் சாமுவேலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…