இந்தியா சினிமாவில் நிறைய பாடகர்கள் வந்து கொண்டே இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே நீண்ட நாள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றனர்.அந்த வகையில் பிரபல பாடகர் ஒரு பாடலை பாட 3 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்தியர்களால் அதிக ரசிக்கப்படும் குரலாக இருப்பவர் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இவர்தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகராக தற்போது இருந்து வருகிறார் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக தன்னோட இசையில் மட்டுமே கவனத்தை செலுத்தும் இவர் வேறொரு இசையமைப்பாளருக்கு பாடல்கள் பாடுவதில்லை.ஆனால் வேறொரு இசையமைப்பாளர் இசையில் இவர் பாட வேண்டுமென்றால் அதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்க: இயக்குனரிடம் கெஞ்சி நடிக்க வைத்த தந்தை… பிளாக்பஸ்டர் ஹிட்டான விஜய் படம்!
அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான் சில ஆல்பம் பாடல்கள், இந்தி பாடல்கள்,தமிழ் பாடல்கள் என பல மொழிகளில் தன்னுடைய குரலில் வேறு இசையமைப்பாளருக்கு பாடியுள்ளார்.
இவர் ஒரு பாடலுக்கு வாங்கும் சம்பளம் இந்திய சினிமாவில் பாடல் பாடும் ஒரு முன்னணி பாடகர் பெறும் சம்பளத்தை விட 12 முதல் 15 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.இதனால் என்னவோ பலர் இவரை பாடல் பாட அழைப்பதில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.