லண்டனில் நடைபெறும் சர்வதேச அளவிலான தொழிலதிபர்களின் மாநாடு: கோவையில் நடைபெற்ற அறிமுக கூட்டம்..!!

Author: Rajesh
19 March 2022, 11:39 am

கோவை: தொழில் திறன்களை மேம்படுத்த லண்டனில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான தமிழர்களின் மாநாடு குறித்த அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் எழுமின் அமைப்பின் சார்பாக சர்வதேச அளவிலான நடக்கவிருக்கும் தொழிலதிபர்களின் மாநாடு குறித்து அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வரும் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை லண்டனில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்க்கும் தொழில் அதிபர்களின் உலக அளவிலான தமிழ் திறனாளர்கள் மாநாடு நடக்க உள்ளதாகவும், இதன் மூலம் தொழில் திறன்களை மேம்படுத்தவும் ,உலக முழுவதும் உள்ள தொழில் முனைவோர்களை இணைத்து தமிழர்களுக்கான தமிழ் முதலீட்டு வங்கி,தமிழ் டிஜிட்டல் கரன்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஜனவரி மாதத்தை தமிழ் மரபு திங்களாக அறிவித்த லண்டன் சட்ட பேரவை உறுப்பினர்களை அழைத்து இம்மாநாட்டை நடத்துவதாகவும்,இளம் தொழில் முனைவோர்களை வரவழைத்து தமிழ் சமூகத்தோடு இணைப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.மேலும் tamilrise.org என்ற இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!