கோவையில் தக்காளி வரத்து அதிகரிப்பு : விலை கிடு கிடு சரிவு…
Author: kavin kumar12 February 2022, 9:35 pm
கோவை: கோவையில் தக்களாளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது,
கடந்த ஆண்டு, நவம்பர், மற்றும் டிசம்பர் மாதம் தக்காளியின் வரத்து குறைவு காரணமாக கோவையில் அதிகபட்சமாக, தக்காளியின் விலையானது, 120 ருபாய்க்கும் மேல் விற்பனையானது, இதற்கு முக்கிய காரணமாக, தமிழகத்தில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில், தக்காளி பயிரிடப்படுவது, வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்திலும், வடகிழக்குப் பருவமழை காலத்திலும், தக்காளி விலை சற்று உயர்ந்து காணப்படும், ஆனால் கடந்த ஆண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு, மேலாக மிகக்கடுமையாக விலை உயர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் தக்காளியை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர், இதன் காரணமாக தக்களாளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி விலை குறைந்துள்ளது,
மேலும் இது குறித்து கோவை டவுன்ஹால் அடுத்த தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் தக்களாளி வியாபாரியான மணிகண்டன் கூறும்போது,”தக்காளியின் விளைச்சல் கோவையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி கிணத்துக்கடவு பொன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளியை விவசாயம் செய்துளள்னர், இதனால், தக்காளியின் வரத்து தினமும் 15 டன் முதல், 18 டன் வரை வருகின்றது, மேலும் வெளியூர் தக்களாளிகளான ஒசூர், பெங்களூர், போன்ற பகுதிகளில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது நாட்டு தக்காளி 25 கிலோ கொண்ட பெட்டி, ருபாய் 150 முதல் 200 வரை மட்டுமே விற்பனையாகின்றது இதனால் கிலோ 10 ருபாய்க்கு விற்பனையாகின்றது இன்னும் ஒரு வாரம் இதேநிலை நீடித்தால் தக்களாளி விவசாயிகள் கடும் நஷ்டத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்றார்.