மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காலவரையற்ற போராட்டம்..! மின்துறை ஊழியர்கள் அறிவிப்பு…

Author: kavin kumar
31 January 2022, 5:43 pm

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மையமாகக் மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிடக்கோரி நாளை முதல் மின்துறை ஊழியர்கள்,

தங்களது பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அனைத்து விதமான மின் சேவைகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்துறை தனியார் மயமாக்கப்படாது என மாநில முதல்வர் உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ