வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் : வாக்குறுதிகளை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்க செய்து பிரச்சாரம்…
Author: kavin kumar14 February 2022, 2:04 pm
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளர் இருசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கியை கட்டி வாக்காளர்களிடம் தனது கோரிக்கைகளை முன்வைத்து வலம் வருவது பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வித்தியாசமான யுக்திகள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வழக்கறிஞர் கண்ணன் தனது பகுதியில் உள்ள கோபால் நகர், பாரதி நகர் போன்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன்,
அதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுக்கப்படும், கல்லூரி முடித்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அரசு வேலை மற்றும் நீட் தேர்வுக்கு நிலையத்திற்கான பயிற்சி வழங்கப்படும், இப்பகுதியில் யாரும் இறந்தால் இலவசமாக தகனம் செய்யப்படும் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சாலை கழிவுநீர், வாய்க்கால் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படும் என 10க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை ஒலிபெருக்கி மூலம் செய்து இரு சக்கர வாகனத்தில் 14வது வார்டு பகுதி முழுவதும் தொடர்ந்து சுற்றி வருவது வாக்காளர்களே வியப்பையும், அதேபோல் புதிய வித்தியாசமான திட்டங்கள் மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.