தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா : பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 4:48 pm

கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், ஆதியோகி ருத்ராக்‌ஷத்தையும் பிரசாதமாக பெற்று கொள்ளலாம்.

பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது.

இதுதவிர, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருவாரூர், நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், திண்டுக்கல் உட்பட 32 இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை isha.co/msrtn-ta என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா மற்ற எல்லா இடங்களிலும் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத க்ரியாவுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் திரு. வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் திரு. மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான திரு. நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் திரு. ராம் மிரியாலா உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.

இது தவிர, கேரளாவைச் சேர்ந்த ‘தெய்யம்’ நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களும் விழாவை ஆட்டம், பாட்டத்துடன் அதிர செய்ய உள்ளனர்.

மஹாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.

  • new title for kamal haasan in thug life movie அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?