ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… ருத்ராட்சத்தை வீட்டில் இருந்தே இலவசமாக பெற்று கொள்ளலாம்!!!

Author: Babu Lakshmanan
24 February 2022, 6:10 pm

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்மீக சிறப்புமிக்க ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் சமநிலை பெற முடியும். ஆரா தூய்மை பெறும். எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். மேலும், தியானம் செய்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும். ஈஷாவில் வழங்கப்படும் ஐந்து முக ருத்ராட்சத்தை ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் அணிந்து கொள்ளலாம்.

மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு கூறுகையில், “மஹாசிவராத்திரி தினம் இயற்கை நமக்கு அளித்து இருக்கும் ஒரு மகத்தான அன்பளிப்பு. இந்த ஒரு புனித ராத்திரியில் நீங்கள் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் மகத்தான நன்மைகளை பெற முடியும். இந்த நன்மை தமிழ் மக்கள் அனைவருக்கும் சேர வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அருள்” என கூறியுள்ளார்.

இவ்விழா மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கும். சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்ச பூத ஆராதனையுடன் தொடங்கும். பின்னர், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சியும் நடக்கும். மேலும், மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து இருக்க புகழ்பெற்ற இசை கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளது.

sadhguru - updatenews360

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மிக குறைவான மக்கள் மட்டுமே இவ்விழாவில் நேரில் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில் பங்கேற்கலாம்.

இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ – டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ – டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!