கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு!

Author:
20 June 2024, 12:57 pm

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வீடுகள் உள்ள பகுதியில் போலீசார் குவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று விஷ சாராயம் குடித்து சம்பவம் தமிழ்நாடு முழுவது அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எஸ் எஸ் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியரும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட போலீசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். சாராயம் விற்கப்பட்ட கருணாபுரம் பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது வீடுகளுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி கருணாபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளின் இருபுறங்களும் சுண்ணாம்பு தெளித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில் 20 பேர்கள் உடல் தற்போது உறவினர் வீட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

அதிகப்படியான நபர்கள் இறந்துள்ளதால் பதட்டம் நிலவும் என்பதால் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!