வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2025, 5:51 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசுகையில் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவின் பாதிப்புக்கள் குறித்த கேள்விக்கு: இபிஎஸ் அவர்கள் தெளிவாக கூறி உள்ளார். இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்க அவர்களுக்கு பிரச்சனை என்றால் அதிமுக குரல் கொடுக்கும்.
இதையும் படியுங்க: 2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!
வக்ஃபு வாரிய திருத்த சட்டம்,நாங்கள் ஏற்க மாட்டோம் சிறுபான்மையினருக்கு சிறு சந்தேகம் வந்தாலும் அவர்களின் கருத்தை கேட்காமல் சட்டத்தை ஏற்க கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு, இபிஎஸ் அவர்களின் நிலைப்பாடு.
வக்ஃபு வாரிய திருத்தத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோதே திமுக எதிர்த்திருக்க வேண்டும். மாநிலங்களையிலும் முழுமையாக எதிர்க்க வேண்டும். நாங்கள் மக்களவையில் இல்லை மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் முழுமையாக எதிர்த்துள்ளோம்.

திமுகவினர் சட்டத்திருத்த மசோதாவில் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் முழுமையாக எதிர்க்கவில்லை. அமன்மெண்டில் திமுகவினர் சஜ்ஜக்ஷன் செய்துள்ளனர். பட்டியலை காண்பித்து மு.தம்பிதுரை எம்பி பேசினார்.
சட்டத்தை ஏற்க மாட்டோம் என்ற திமுகவினர் கிளாஸ் வரும்போது திருத்தங்களை கொடுத்தது ஏன்? திருத்தத்தை கொடுத்தார்கள் என்றால் வக்ஃபு வாரியத்தை ஏற்றதாக தானே அர்த்தம். திமுகவினர் எதிர்த்தார்கள்.. ஆனால் திருத்தம் கொடுத்தது ஏன்? அதிமுக எந்த திருத்தமும் கொடுக்கவில்லை.. இதை தான் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்கிறோம்
கூட்டணி தேர்தல் நேரத்தில் ஏற்படும், அதிமுக கொள்கையில் எடப்பாடி அவர்கள் நழுவியது இல்லை, நழுவ மாட்டார்.. நாங்கள் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளோம்.. திமுக ஆதரித்து திருத்தம் கொடுத்துள்ளது…
திமுகவின் மாநிலங்களவை எம்பி இளங்கோ நாடாளுமன்றத்தில்,இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய இந்து மக்களுக்கு குடியுரிமை கேட்டார்.. அங்கிருந்து வந்தவர்கள் இஸ்லாமியர்கள், கிறித்தவர்களும் உள்ளனர்.. இந்துக்களுக்கு மட்டும் தான் திமுகவினர் பேசினர்.. நான் அதிமுக சார்பில் அனைவருக்கும் குடியுரிமை கேட்டேன்.
சட்டமன்றத்தில் எதிர்த்து பேசும் திமுக, நாடாளுமன்றத்தில் திருத்தம் கொடுக்கிறார்கள். திருத்த சட்டத்தை மாற்றினாலும் இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள் . அவர்களுக்கு ஆதரவாக அதிமுக தான் பேசி வருகின்றனர் திமுகவினர் இஸ்லாமிய வாக்குகளுக்காகவே இப்படி நடந்துக்கொள்கிறார்கள்